/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் காட்டேரி பூங்கா
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் காட்டேரி பூங்கா
ADDED : ஏப் 06, 2025 09:44 PM

குன்னுார்; குன்னுாரில் ஜெகரண்டா மலர்கள் சீசன் துவங்கிய நிலையில், காட்டேரி பூங்கா சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், மலைகள், தேயிலை தோட்டம், நீரோடை என பசுமையான இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது.
நடப்பாண்டு கோடை சீசனில், முதல் முறையாக மே, 31, ஜூன் 1ம் தேதிகளில், மலைப்பயிர்கள் கண்காட்சி நடக்கிறது. இதற்காக, 'தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப்பயிர்கள் மற்றும் தேங்காய், பனை, நுங்கு, இளநீர், கொக்கோ , பாக்கு' உட்பட பல்வேறு வகை பயர் களும் அலங்கார வடிவமைப்புகள் மேற்கொள்ள தோட்டக்கலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஜெகரண்டா மரங்களில் பூத்து குலுங்கும் ஊதா நிற மலர்கள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.

