/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதை வசதி கோரி வி.சி.க., போராட்டம்
/
நடைபாதை வசதி கோரி வி.சி.க., போராட்டம்
ADDED : அக் 22, 2024 11:44 PM
ஊட்டி: நடைபாதை வசதி இல்லாததை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி அருகே பூபதியூர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த பூர்வீக நடைபாதையை தனியார் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுமக்களின் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு, நடைபாதை அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
நடைபாதை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நீலகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அதிகாரிகள் வந்து, 'பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்ததால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் குடியரசு, மண்டல துணை செயலாளர் மண்ணரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

