/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வாகன பிரசாரம்
/
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வாகன பிரசாரம்
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வாகன பிரசாரம்
வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி வாகன பிரசாரம்
ADDED : ஜூலை 13, 2025 08:30 PM

பந்தலுார்; வன விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, காங்., சார்பில் பந்தலுாரில் வாகன பிரசாரம் நடந்தது.
நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். கூடலுார் வட்டார தலைவர் அம்சா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தேவாலா, பந்தலுார், சேரம்பாடி, அய்யன்கொல்லி, பாட்டவயல், பிதர்காடு, நெலாக்கோட்டை, தேவர்சோலையில் பிரசாரம் செய்யப்பட்டது.
அதில்,'வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும்; விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்வேண்டும்; கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் தொடரும் வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; நெல்லியாளம் நகராட்சியில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன், கூடலுார் நகர தலைவர் முகமது ஷாபி, நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகள் திரளாக பங்கேற்றனர்.