/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை; போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை
/
தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை; போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை
தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை; போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை
தமிழக-கேரள எல்லையில் வாகன சோதனை; போதைப்பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை
ADDED : டிச 19, 2024 11:19 PM

கூடலுார்; கர்நாடகாவில் இருந்து கூடலுார் வழியாக, கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, கூடலுார் நாடுகாணியில், இரு மாநில போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருள்கள் கடத்தி வருவதை தடுக்க, கேரளாவில் போலீசார் பல்வேறு இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கூடலுார் தேவாலா இன்ஸ்பெக்டர் சங்கரேஷ்வரன் தலைமையில், தமிழக போலீசார்; மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கலால் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரித்தீஷ் தலைமையில், இரு மாநில போலீசார் இணைந்து, தமிழக -கேரளா எல்லையான நாடுகாணியில் சோதனை சாவடியில் ஈடுபட்டனர். எல்லையில், கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை, சோதனைக்கு பின் அனுமதித்தனர்.
போலீசார் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்துவதை தடுக்க, தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கூடலுார் வழியாக கேரளாவுக்கு வரும் வாகனங்கள், இப்பகுதியில் சோதனைக்கு பின் கேரளாவுக்கு அனுமதிக்கப்பட்டது. அடிக்கடி இதுபோன்ற சோதனை நடக்கும்,' என்றனர்.