/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்க அனுமதி
/
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்க அனுமதி
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்க அனுமதி
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் இயக்க அனுமதி
ADDED : டிச 31, 2024 06:29 AM
கூடலுார் : ஊட்டியிலிருந்து, கல்லட்டி வழியாக மசினகுடிக்கு, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கல்லட்டி, மசினகுடி சாலை அதிக கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட குறுகலான சாலை என்பதால் அடிக்கடி, வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஊட்டியிலிருந்து கல்லட்டி வழியாக மசினகுடிக்கு உள்ளூர் வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் இயக்க ஏற்கனவே தடை உள்ளது.
மசினகுடியில் இருந்து, ஊட்டிக்கு வாகனங்கள் இயக்க தடை இல்லை. இதன் மூலம் சாலையில் விபத்துகள் குறைந்தது.
இந்நிலையில், கடந்த மாதம், 9ம் தேதி முதல் ஊட்டியிலிருந்து கல்லட்டி வழியாக உள்ளூர் கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், கூடலூர் வழியாக பல கி.மீ., சுற்றி மசினகுடி வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், பொருட்கள் விலை அதிகரிக்கும் என்பதால், 'தடையை நீக்க வேண்டும்' என, வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதனை பரிசீலனை செய்த, மாவட்ட நிர்வாகம், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்களை கல்லட்டி வழியாக மசினகுடிக்கு இயக்க மீண்டும் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவால் வியாபாரிகள், பொதுமக்கள் நிம்மதிஅடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக, ஊட்டிக்கு வாகனங்கள் செல்லவும்; ஊட்டியிலிருந்து கல்லட்டி வழியாக மசினகுடிக்கு உள்ளூர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் இயக்க தடை இல்லை. பிற வாகனங்கள், வழக்கம்போல் நடுவட்டம் வழியாக செல்ல வேண்டும்,' என்றனர்.