/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் மேக மூட்டம் மோதிய வாகனங்கள்
/
மலை பாதையில் மேக மூட்டம் மோதிய வாகனங்கள்
ADDED : டிச 14, 2024 02:32 AM
குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று சாரல் மழையுடன் கடும் மேகமூட்டம் நிலவியது.
நேற்று காலை, 11:00 மணிக்கு மேட்டுப்பாளையம் - குன்னுார் மலை பாதையில், காட்டேரி பார்க் அருகே, அதிவேகத்தில் வந்த கார், டிப்பர் லாரியை கடக்க முயன்றது.
அப்போது, எதிரே வந்த கேரட் லோடு லாரி மீது மோதியது. அதே வேகத்தில் கார் திரும்பிய போது, பின்புறமாக வந்த பைக் மீதும் மோதியது.
இந்த விபத்தில், பைக்கில் வந்த கோவை கணபதி நகரைச் சேர்ந்த பாஸ்கரன், 29, என்பவர் காயமடைந்தார்.
காரில், 'ஏர்பேக்' திறந்ததால், அருவங்காட்டை சேர்ந்த ஹென்றி, 45, அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

