/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் தேங்கிய நீரில் தத்தளித்த வாகனங்கள்; நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை

ADDED : டிச 03, 2024 05:54 AM

ஊட்டி; ஊட்டியில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழைக்கு வாகனங்கள் நீரில் மூழ்கின.
நீலகிரியில், 'பெஞ்சல்' புயல் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மாவட்ட முழுவதும் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம், இரவு ஊட்டி, கூடலுார், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
அதில், பஸ் ஸ்டாண்ட் ரயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கியது. வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட சில வாகனங்கள் நீரில் மூழ்கின. ரயில்வே போலீஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்தது.
நகரில் ஆங்காங்கே சில இடங்களில் மழை நீர் தேங்கியதால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் சிரமப்பட்டனர். பகலில் ஒரு சில நேரங்களில் சாரல் மழை மட்டும் தென்பட்டது.
நகரில் ஆங்காங்கே தேங்கி நின்ற மழைநீர் மதிய வேளையில் வடிந்தது. காலை நேரத்தில், 'சாரல் மழை, மேகமூட்டம், கடுங்குளிர்,' என , காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி புறநகர் பகுதிகளான எம். பாலாடா , மணலாடா, கோத்தக்கண்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.