/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேங்கடநாத பெருமாள் கோவில் ஆண்டு விழா
/
வேங்கடநாத பெருமாள் கோவில் ஆண்டு விழா
ADDED : ஜன 31, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கட நாத பெருமாள் கோவிலில் ஆண்டு விழா நடந்தது.
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கட நாத பெருமாள் கோவில் பழமையானது. கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று ஆண்டு விழா நடந்தது.
வருடாபிஷேக ஹோமங்கள் முடிந்து, மூலவர் மற்றும் உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.