/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துணை ஜனாதிபதி ஊட்டி வருகை; மோப்ப நாய் உதவியுடன் சோதனை
/
துணை ஜனாதிபதி ஊட்டி வருகை; மோப்ப நாய் உதவியுடன் சோதனை
துணை ஜனாதிபதி ஊட்டி வருகை; மோப்ப நாய் உதவியுடன் சோதனை
துணை ஜனாதிபதி ஊட்டி வருகை; மோப்ப நாய் உதவியுடன் சோதனை
UPDATED : ஏப் 24, 2025 11:47 PM
ADDED : ஏப் 24, 2025 11:06 PM

ஊட்டி; ஊட்டி கவர்னர் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, 25, 26ம் தேதிகளில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். துணை ஜனாதிபதி வருகையை ஒட்டி எஸ்.பி., நிஷா தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
துணை ஜனாதிபதி ஹெலிகாப்டரில் தரையிறங்க உள்ள திட்டுக்கல், கவர்னர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று, ஊட்டி நகரில் தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா காட்சி முனை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகள் வாகனங்களில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.