/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 07, 2025 08:12 PM

ஊட்டி; ஊட்டியில் கிராமப்பகுதி சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவர் பவானி தலைமை வகித்தார். பகுதி சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'பங்கேற்றவர்கள் கிராம சுகாதார செவிலியர்களின் காலி துணை மைய பணியிடங்களை எவ்வித நிபந்தனையும் இன்றி நிரப்ப வேண்டும்; தடுப்பூசி பணிகளை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளை திரும்ப பெற வேண்டும்; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; கிராம செவிலியர்கள் பணியிடங்கள் கிராம செவிலியர்களை கொண்டே நிரப்ப வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.