/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் நத்தம் கிராமத்தில் சீரமைக்கப்படாத நடைபாதை கிராம மக்கள் கண்டனம்

ADDED : டிச 25, 2025 07:11 AM

பந்தலுார்: பந்தலுார் பஜாரை ஒட்டிய, நகராட்சியின், 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நத்தம் கிராமம் அமைந்துள்ளது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செல்லும், சாலை சேதமடைந்து பல ஆண்டுகள் கடந்தும், சாலையை சீரமைக்கவோ, புதிதாக சாலை அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில், சிமென்ட் செங்கற்களை வாங்கி, மண் சாலையில் அடுக்கி வைத்து அதில் நடந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் கிராம நுழைவாயில் பகுதியில் கருப்பு கொடியுடன், 'ஓட்டு கேட்டு கிராமத்திற்குள் யாரும் வர வேண்டாம்,' என, பேனர் நேற்று வைத்து உள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில்,'இந்த பகுதிக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில், பொருட்களை தலைச் சுமையாக, எடுத்து செல்வதுடன், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை நடக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலையே தொடர்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.