/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறப்பு; போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

ADDED : பிப் 20, 2025 09:55 PM
ஊட்டி ; சோலுாரில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி அருகே சோலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பல கட்ட போராட்டங்கள் நடத்தி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுகடை மூடப்பட்டது.  இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஆய்வு மேற்கொண்டது. அப்போதே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் சோலுார்- கோக்கால் செல்லும் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது.
ஊர் தலைவர் தட்டை கூறுகையில், ''கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தும் அதையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். விரைவில் கிராம மக்களை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.