தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோவில் பணியை தடுத்த வனத்துறையினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

 கோவில் பணியை தடுத்த வனத்துறையினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

 கோவில் பணியை தடுத்த வனத்துறையினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்


ADDED : செப் 26, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி நஞ்சநாடு காளி கோவிலில் அருகே வேலி அமைக்க கட்டப்பட்ட கட்டுமானத்தை வனத்துறையினர் இடித்ததால், மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்தில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இங்கு காலை நேர பூஜை செய்வதற்காக, பூஜாரிகள் சென்றபோது, கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமைகள் கோவில் வளாகத்தில் சுற்றி திரிவதை பார்த்து அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து, 'பாதுகாப்பு கருதி, இப்பகுதியில் வேலி அமைத்து தர வேண்டும்,' என, வலியுறுத்தி, கலெக்டருக்கு கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து, வேலி அமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை அங்கு வந்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திர உதவியுடன் வேலிக்கான அடித்தளங்களை அகற்றியுள்ளனர். இதனால், கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் கூறுகையில், ''கலெக்டர் பரிந்துரையின் படிதான் வேலி கட்டுவதற்கான பணியை துவக்கினோம்.

இப்பணியை செய்ய வேண்டுமெனில் சில வனத்துறையினர் லஞ்சம் கேட்டனர். அதனை கொடுக்க முடியாது என்றவுடன் வேலிக்கான கட்டுமானங்களை இடித்தனர். மீண்டும் கலெக்டரின் புகார் அளிக்க உள்ளோம்,'' என்றார்.

ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், ''குறிப்பிட்ட கோவில் காப்பு காட்டினுள் அமைந்துள்ளது. வனவிலங்குகள் தொல்லை இருப்பின், சிறிய வேலி அமைத்து கொள்ளலாமே தவிர, சுவர் கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளோம்.

தொடர்ந்து, அனுமதி இல்லாமல் நடந்த கட்டடத்தை அகற்றி உள்ளோம். இதனை நாங்கள் பணம் ஏதும் கேட்கவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us