/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விநாயகர் கோவில் தேர் திருவிழா திரளாக பக்தர்கள் பங்கேற்பு
/
விநாயகர் கோவில் தேர் திருவிழா திரளாக பக்தர்கள் பங்கேற்பு
விநாயகர் கோவில் தேர் திருவிழா திரளாக பக்தர்கள் பங்கேற்பு
விநாயகர் கோவில் தேர் திருவிழா திரளாக பக்தர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 28, 2024 12:16 AM

கூடலுார், பிப். 28- -
கூடலுார் அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலின், 38ம் ஆண்டு தேர் திருவிழா, 21ம் தேதி துங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், காலை 5:00 மணி முதல் உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், கும்ப பூஜை, யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு மேளதாள வாக்கியங்கள், தாரை தப்பட்டை, செண்டை மேளம் வாத்தியங்களுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் ஊர்வலம் துவங்கியது.
ஊர்வலம் மேல் கூடலுார் மாரியம்மன் கோவில், சுங்கம் முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில், துப்புகுட்டி பேட்டை சென்று கோவிலை வந்தடைந்து. இரவு சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது.