ADDED : செப் 21, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுாரில் வி.எச்.பி., மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
பந்தலுார் தாலுகாவில், 30 இடங்களில், வி.எச்.பி., மற்றும் கிராம மக்கள் இணைந்து விநாயகர் சிலைகளை வைத்து, கடந்த ஒரு வாரமாக சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று மதியம் அனைத்து சிலைகளும் பந்தலுார் ‘ரிச்மவுண்ட்’ மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வி.எச்.பி., மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில், பஜார், காலனி, மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், உப்பட்டி வழியாக, பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் அருகே உள்ள ஆற்றங்கரையில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
