ADDED : செப் 17, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரியில், அகில பாரத அனுமன் சேனா சார்பில், கொட்டும் மழையிலும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
அனுமன் சேனா மாவட்ட பொது செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். தேசிய தலைவர் ‘சிட்கோ’ ராஜேந்திரன் ஊர்வலத்தில் துவக்கி வைத்தார். டானிங்டன் பகுதியில் துவங்கிய ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், காம்பாய் கடை மற்றும் ராம்சந்த் வழியாக, உயிலட்டி நீர்வீழ்சியில் நிறைவு பெற்றது. அங்கு, 26 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. கொட்டும் மழையிலும், ‘ஓம் காளி; ஜெய் காளி’ கோஷம் முழங்க வாத்தியம் இசைக்க ஊர்வலம் நடந்தது. அனுமன் சேனா மாவட்ட செயலாளர் ரத்தினம், பா.ஜ., நகர தலைவர் கமல் மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
