/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தீவிரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தீவிரம்
ADDED : நவ 04, 2025 08:46 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணி நடந்து வருவதை ஒட்டி, நிலை அலுவலர்களுக்கு, கலெக்டர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கினார்.
மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உட்பட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -- 2026 நடந்து வருகிறது.
இதில், 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த அனைவரும் வாக்களிக்க உறுதி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், இப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணியில் மூன்று தொகுதியில், 736 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி அருகே மேல்கவ்வட்டியில் வீடுகளுக்கு வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளை ஊட்டி ஆர்.டி.ஓ.,டினு அரவிந்த் ஆய்வு செய்தார். வரும் டிச., மாதம் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் இடம் பெற வாய்ப்புள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் லட்சுமி பவ்யா, பணியை ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி ஆய்வு செய்தார்.
இதில், ஓட்டுப்பதிவு அலுவலரான ஊட்டி ஆர்.டி.ஓ., டினு அரவிந்த், உதவி ஓட்டுப்பதிவு அலுவலர் சங்கர் கணேஷ் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

