/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.14 கோடியில் உருவான கட்டடம் பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சம்.. கொஞ்சம் கவனியுங்க!
/
ரூ.14 கோடியில் உருவான கட்டடம் பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சம்.. கொஞ்சம் கவனியுங்க!
ரூ.14 கோடியில் உருவான கட்டடம் பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சம்.. கொஞ்சம் கவனியுங்க!
ரூ.14 கோடியில் உருவான கட்டடம் பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சம்.. கொஞ்சம் கவனியுங்க!
ADDED : நவ 04, 2025 08:45 PM

ஊட்டி: - ஊட்டிக்கு வரபிரசாதமாக, 14 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பழங்குடியினர் பண்பாட்டு மையம் பராமரிப்பு இல்லாததால், பாதுகாப்பற்ற சூழலில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஊட்டி சிறந்த சுற்றுலா நகரமாக விளங்குகிறது. பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கும் ஊட்டியில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் சார்பில், 2017ல், 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழங்குடியினர் பண்பாட்டு மையம் கட்டப்பட்டது.
பாரம்பரியமிக்க, ஊட்டி அசெம்பிளி திரையரங்கு மற்றும் அரசு தாவரவியல் பூங்கா இடையே, காற்றோட்டத்துடன், விசாலமாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகையான மைய கட்டடம், மாவட்டத்திற்கு வரபிரசாதமாகும். பழங்குடியின மக்களின் நிகழ்ச்சிகள் உட்பட, மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடக்கும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது வழக்கம். 500க்கும் மேற்பட்ட குஷன் இருக்கைகளுடன், கலை நயத்துடனான பிரமாண்ட மேடை அனைவரையும் கவர்ந்துள்ளது. தரைதளத்தில் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு இடவசதி, மேல் தளத்தில் அரங்குகள் அமைப்பதற்கான வசதி போன்ற அம்சங்கள் இந்த கட்டடத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கின்றன.
பராமரிப்பில் தொய்வு இந்த கட்டடம் சப்-கலெக்டர் மேற்பார்வையில் இருந்து வருகிறது. சமீப காலமாக, கட்டடத்தில் பராமரிப்பு பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், கட்டட முதல் தளத்தின் 'சீலிங்' கூரை, பெயர்ந்து ஓட்டை ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் விழும் நிலையில் உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இந்த பகுதியில் அதிகம் நடமாடுவதால் ஆபத்து அதிகரித்துள்ளது. கட்டடத்தில் ஆங்காங்கே ஓட்டை உடைச்சல், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 14.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பிரமாண்டமான கட்டடத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உகந்ததாக உள்ளது.
ஆனால், போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. ஒரே கூரையின் கீழ், இங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், மக்கள் அதிகம் கூடுவதால், பாதுகாப்பு கருதி, பராமரிப்பு பணியை மேம்படுத்துவது அவசர அவசியம்' என்றனர்.
சப்-கலெக்டர் அபிலாஷ் கவுர் கூறுகையில், '' என் பார்வைக்கு தகவல் ஏதும் வரவில்லை. ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்

