/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதி மீறி இயக்கிய 3 வாடகை ஸ்கூட்டர்கள் பறிமுதல்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

ADDED : நவ 04, 2025 08:44 PM

ஊட்டி: -விதி மீறி இயக்கப்பட்ட மூன்று வாடகை ஸ்கூட்டர்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சு ற்றுலா நகரமான ஊட்டிக்கு, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் தமிழகம் உட்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு அமர்த்த கூடாது என, அறிவுறுத்தப்பட்டிருந்தும் பலர் வாடகைக்கு விடுவதால், இங்குள்ள டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் இருந்து, மூன்று ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுத்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆறு பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பு, மொழி தெரியாத அவர்கள், டாக்சி டிரைவர்களிடம் சுற்றுலா தலங்களுக்கு வழி கேட்டுள்ளனர். விசாரித்ததில், கோவையில் இருந்து, இருசக்கர வாகனங்களை, ஒரு நாளுக்கு, 2,500 ரூபாய் வீதம் வாடகைக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து, ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அளித்த தகவலின் படி, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வாடகைக்கு ஸ்கூட்டர்களை எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. மூன்று ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சொந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.