/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை சார்பில் வாக்காளர் தின பேரணி
/
வருவாய் துறை சார்பில் வாக்காளர் தின பேரணி
ADDED : ஜன 28, 2025 04:54 AM
குன்னூர் : குன்னுார் வருவாய் துறை சார்பில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குன்னுார் பெட்போர்டு பகுதியில், துவங்கிய பேரணி மவுன்ட் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலைய வளாகத்தை வந்தடைந்தது.
பேரணியை, குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா துவக்க வைத்தார். டி.எஸ்.பி., முத்தரசு, தாசில்தார் ஜவகர், தேர்தல் துணை தாசில்தார் சகுந்தலா மற்றும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி, மாணவியர், ஐ.டி.ஐ., மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதில், 'அனைவரும் கட்டாயம் ஓட்டு போடுவது; 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுதல்,' உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். தொடர்ந்து, உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

