தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தடுப்புச்சுவர் மீண்டும் இடியும் அபாயம்: அச்சத்தில் நடந்து செல்லும் மாணவர்கள்

தடுப்புச்சுவர் மீண்டும் இடியும் அபாயம்: அச்சத்தில் நடந்து செல்லும் மாணவர்கள்

தடுப்புச்சுவர் மீண்டும் இடியும் அபாயம்: அச்சத்தில் நடந்து செல்லும் மாணவர்கள்


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் இடிந்து விழுந்த, 50 அடி உயர தடுப்புச்சுவரின் ஒரு பகுதி மீண்டும் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளதால், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி அருகே உள்ள தனியார் சொகுசு பங்களாவின், 50 அடி உயர தடுப்புசசுவர் கடந்த வாரம் பெய்த மழையில் சரிந்து சாலையில் விழுந்தது. அங்கு நின்றிருந்த காரும் சேதமடைந்த நிலையில், அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு வார காலம் ஆகியும், எஞ்சியுள்ள ஒரு பகுதி தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் இடிந்து விழும் அபாயத்தில் அந்தரத்தில் தொங்குகிறது. இப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் பள்ளி கேட் முன்பு ஏராளமான பள்ளி மாணவர்களும், வாகன ஓட்டிகளும் தினசரி சென்று வருகின்றனர்.

மக்கள் கூறுகையில், ‘தொடர் மழையால், எப்போது வேண்டுமானாலும் சுவர் இடிந்து விழும் சூழலில் உள்ளதால், போர்க்கால அடிப்படையில் இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us