/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
20 சதவீத போனஸ் வேண்டும்: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
20 சதவீத போனஸ் வேண்டும்: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
20 சதவீத போனஸ் வேண்டும்: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
20 சதவீத போனஸ் வேண்டும்: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 28, 2024 11:32 PM

குன்னுார்: குன்னுார் டான்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
குன்னுார், கோத்தகிரி, நடுவட்டம், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம் பாண்டியாறு மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் டான்டீ நிறுவனம் செயல்படுகிறது. டான்டீ தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில், 3,800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு, 20 சதவீத போனஸ் கோரி, குன்னுாரில் உள்ள டான்டீ தலைமை அலுவலகம் முன் நேற்று ஏ.ஐ.டி.யு.சி., தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''டான்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அரசு அறிவித்த, 10 சதவீதம் போனஸ் கூட வழங்கப்படவில்லை. 20 சதவீத போனஸ் வழங்காவிட்டால் நாளை (இன்று) முதல் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்,'' என்றார்.