/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தில் கொட்டப்படும் கழிவுகள் ரூ.20 ஆயிரம் அபராதம்
/
வனத்தில் கொட்டப்படும் கழிவுகள் ரூ.20 ஆயிரம் அபராதம்
வனத்தில் கொட்டப்படும் கழிவுகள் ரூ.20 ஆயிரம் அபராதம்
வனத்தில் கொட்டப்படும் கழிவுகள் ரூ.20 ஆயிரம் அபராதம்
ADDED : மார் 09, 2024 07:18 AM

குன்னுார் : குன்னுார் வனப்பகுதியில் கட்டட கழிவுகளை கொட்டிய மூன்று பேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், குப்பைகள் கொட்டும் இடமாக வனங்கள், நீரோடைகள், நீர் பிடிப்பு பகுதிகள் மாறி வருவது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
அதில், 'பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மருத்துவ கழிவுகள், துருப்பிடித்த இரும்பு வகைகள், என, அனைத்து வகை குப்பை கழிவுகள் வனங்களுக்குள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன.
பந்துமை, டைகர்ஹில், லேம்ஸ்ராக் சி.எம்.எஸ்., கே.எம்.கே., உட்பட சாலையோர வனப்பகுதிகளில் கட்டட கழிவுகள், குப்பைகள் மூட்டையாக கட்டி பிக்--அப் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.
உணவை தேடி வரும் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்டவை கண்ணாடி துண்டுகள், பிளாஸ்டிக் போன்றவற்றால், உயிரிழக்க நேரிடுகிறது.
20 ஆயிரம் ரூபாய் அபராதம்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கன்னி மாரியம்மன் கோவில் தெரு, வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த பிக்-அப் வாகனத்தில் கொண்டு வந்த கட்டட கழிவு மூட்டைகளை வனப்பகுதியில் வீச துவங்கினர். இதனை கண்ட வனச்சரகர் ரவீந்திரநாத் வாகனத்தை பறிமுதல் செய்து மூவரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, டி.எப்.ஓ., கவுதம் உத்தரவின் பேரில், 'டிரைவர் ஜெயபாலனுக்கு, 10 ஆயிரம் ரூபாய், பூமாலன, அரூண் ஆகியோருக்கு, ரூ.5,000,' என மொத்தம், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில், ''வனப்பகுதியில் கண்ணாடிகளுடன் கட்டட கழிவுகள் கொட்டுவதால் வனவிலங்குகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
வனப்பகுதியில் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

