/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டபெட்டு பஜாரில் கழிவு தேக்கம்: சுகாதார சீர்கேடு
/
கட்டபெட்டு பஜாரில் கழிவு தேக்கம்: சுகாதார சீர்கேடு
கட்டபெட்டு பஜாரில் கழிவு தேக்கம்: சுகாதார சீர்கேடு
கட்டபெட்டு பஜாரில் கழிவு தேக்கம்: சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 20, 2025 10:06 PM

கோத்தகிரி ; கோத்தகிரி கட்டபெட்டு பஜார் கால்வாயில் கழிவுகள் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி கட்டபெட்டு பஜார், கக்குச்சி, நடுஹட்டி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் கிளினிக்குகள் அமைந்துள்ளன. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்கள், பஜாரை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், பஜாரில் இருந்து, குன்னுார் பஸ் நிறுத்தம் செல்லும் நடைபாதையை ஒட்டி, அமைந்துள்ள கழிவு நீர் கால்வாய், அடிக்கடி தூர்வாராத நிலையில், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், கழிவுநீர் கால்வாயை துார் வாரி துாய்மையாக்க வேண்டும்.