/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் வியப்பு

ADDED : ஜூலை 29, 2025 07:16 PM

கூடலுார்:
கூடலுார் தொரப்பள்ளி அருகே, நடுவட்டம் வனத்தில், முக்கூர்த்தி ஹல்லா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
கூடலுார் பகுதியில் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது. நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாண்டியார் - புன்னம்புழா, மாயாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சாலையோர வனப்பகுதிகளில் புதிய நீரூற்றுகள் உருவாகி உள்ளன. அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட துவங்கியுள்ளது.
மசினகுடி சிங்கார வனத்தை ஒட்டி, நடுவட்டம் வனப்பகுதி வழியாக மாயாறு ஆற்றை நோக்கி வரும், முக்கூர்த்தி ஹல்லா ஆற்றின நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், முதுமலை மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையும், மிதமான காலநிலையும், பசுமையான வனப்பகுதி, இயற்கை நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் மழை வெள்ளம் மனதையும், கண்களையும் கவர்ந்துள்ளது,' என்றனர்.