/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பணை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்!
/
தடுப்பணை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்!
ADDED : நவ 05, 2025 08:01 PM

கூடலூர்: கூடலூர், தொரப்பள்ளி குணில் பகுதியில் உள்ள விவசாயிகள், வயல் நிலங்களில் பருவமழை காலத்தில் நெல்லும், கோடையில் காய்கறியும் பயிரிட்டு வருகின்றனர். குணில் ஆற்றில் பருவமழை காலங்களில், வெள்ளம் கரைபுரண்டு ஓடும். கோடை காலங்களில் தண்ணீர் வரத்து மிக குறைவாக இருக்கும். கோடைகாலத்தில் ஆற்றுநீரை பயன்படுத்தும் வகையில், ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்துள்ளனர். நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இதில் தேங்கும் நீரை கோடையில் பாசனத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தடுப்பணை சேதமடைந்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணைக்கு குளிக்க வரும் கிராம மக்கள் ஆபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனால், சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயி நாராயணன் கூறுகையில், 'தடுப்பணையில் தேங்கும் தண்ணீர் நிலத்தடி நீர் உயர்வுக்கு உதவுகிறது. கோடை காலத்தில், பாசனத்திற்கும் பயன்படுகிறது. தடுப்பணை சேதமடைந்துள்ளதால் நிலத்தடிநீர் உயர்வது பாதிக்கப்படுவதுடன், கோடையில் விவசாயத்திற்கும் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சேதமடைந்த தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றார்.

