UPDATED : அக் 15, 2026 04:42 PM
ADDED : அக் 15, 2026 04:38 PM
ஊட்டி:
ஊட்டி நீர்பாசன துறை நீர்வளத்துறை பவானி வடிநில வட்டத்தில் உள்ள, செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், சேர, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன், இலகுரக, கனரக வாகன உரிமத்துடன், 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியம், கண் பார்வை இருக்க வேண்டும். வயது வரம்பு, ஓ.சி., பொது பிரிவுக்கு, குறைந்தபட்சம், 18 அதிகபட்சம், 30; பி.சி., 18 முதல், 35 வரை; எஸ்.சி/ எஸ்.டி., வரம்பு 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதர தகுதியுள்ள நபர்கள் தங்களது , கல்வி சான்று, சாதி சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல், டிரைவர் லைசென்ஸ், மூன்றாண்டு முன் அனுபவ சான்று ஆகியவற்றின், சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர், பவானி வடிநில வட்டம், 3 வது தளம், கருவூல அலுவலகம், ஈரோடு, 638011 என்று முகவரியில், பதிவு தபாலில் விண்ணப்பிக்கலாம். நவ., 12ம் தேதி, மாலை, 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
