/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் பாதிப்பு
/
தண்ணீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் பாதிப்பு
ADDED : அக் 05, 2025 11:05 PM

கோத்தகிரி; கோத்தகிரி சுப்ரமணியபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, சுப்ரமணியபுரத்தில், 100க்கு மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த பல நாட்களாக, தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இரவு நேரங்களில், தண்ணீர் பிடிக்க பெண்கள் குடங்களுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சுகாதாரமற்ற இந்த தண்ணீரால் உடல் உபாதைகள் ஏற்படுவது தொடர்கிறது.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி, கக்குச்சி ஊராட்சி நிர்வாகம், கிராமத்திற்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.