/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் தட்டுப்பாடு: தனியார் வாகனங்களில் 'சப்ளை '
/
தண்ணீர் தட்டுப்பாடு: தனியார் வாகனங்களில் 'சப்ளை '
ADDED : பிப் 07, 2025 08:23 PM

கோத்தகிரி; கோத்தகிரி நகரில் உள்ள டீக்கடை மற்றும் ஹோட்டல்களில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தனியார் வாகனங்கள் வாயிலாக தண்ணீர் பெறப்படுகிறது.
கோத்தகிரி நகரத்திற்கு, முக்கிய நீராதாரமான ஈளாடா தடுப்பணையில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வறட்சிநாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வழக்கம்.
இதனை தவிர்க்க, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்ட அளக்கரை மெகா குடிநீர் திட்டம் தோல்வி அடைந்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதன்படி, மத்திய அரசின், 'ஜல்ஜீவன்' திட்டத்தில், தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து வீடுகளுக்கும்நிறைவான தண்ணீர் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்காக, கோத்தகிரி சக்திமலை பகுதியில், மெகா குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அங்கிருந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு வினியோகிக்க, குடிநீர் இணைப்புகள் வழங்க, குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில், குடியிருப்புகளுக்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தற்போது சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதில், கோத்தகிரி நகரில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு, தனியார் வாகனங்களில், ஒரு குடம் தண்ணீர், 10 ரூபாய்; 500 லிட்டர் கொள்ளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டிக்கு 500 ரூபாய் என்ற கட்டணம் அடிப்படையில் சிலர் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'வரும் நாட்களில் குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், உள்ளாட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.