/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டு மாதங்களாக குடிநீர் சப்ளை 'கட்'
/
இரண்டு மாதங்களாக குடிநீர் சப்ளை 'கட்'
ADDED : பிப் 05, 2024 12:55 AM
அன்னுார்:அன்னுாரில், கோவை சாலையில், இரண்டு மாதங்களாக, பொதுக்குழாயில் குடிநீர் சப்ளை ஆவதில்லை.
அன்னுாரில், கைகாட்டியில் துவங்கி, கோவை சாலையில் மூன்று இடங்களில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இரு மாதங்களுக்கு முன், இந்த சாலையின் இருபுறமும் ஐந்தடி அகலப்படுத்தப்பட்டு, மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
பணியின் போது, இயந்திரங்களை பயன்படுத்திய போது, குடிநீர் செல்லும் பிரதான குழாய் உடைந்தது. இதையடுத்து சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள மூன்று பொதுக் குழாய்களிலும் இரண்டு மாதங்களாக தண்ணீர் வருவதில்லை.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

