/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீரோடையில் தண்ணீர் திருட்டு; கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
/
நீரோடையில் தண்ணீர் திருட்டு; கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
நீரோடையில் தண்ணீர் திருட்டு; கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
நீரோடையில் தண்ணீர் திருட்டு; கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 21, 2025 08:36 PM

ஊட்டி; 'நீரோடையை வழிமறித்து தண்ணீர் திருடுவதை தடுக்க வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காரப்பிள்ளு கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட காரபிள்ளு கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். மல்லி கொரை பகுதியில் இருந்து வரும் ஊற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.
அங்குள்ள குடிநீர் ஆதாரத்திலிருந்து வரும் நீரோடையை மறித்து சிலர் திருட்டுத்தனமாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் எங்கள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உல்லத்தி ஊராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தாங்கள் எங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.