/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர்
/
தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர்
தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர்
தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' பயன்படுத்தி தண்ணீர்
ADDED : ஏப் 28, 2025 11:42 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில், தேயிலை தோட்டங்களுக்கு, 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது.
நீலகிரியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக, தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் வாட்டம் கண்டுள்ளன. ஈரப்பதம் படிப்படியாக குறைந்து வருவதால், பயிர்களின் வளர்ச்சியில் தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. விலை வீழ்ச்சியால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் தோட்டங்களை பராமரிக்க, ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, நீர் ஆதாரமுள்ள தேயிலை தோட்டங்களுக்கு 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில், மகசூல் வெகுவாக குறையும் என்பதால், ஓடைகளில் தடுப்புகள் அமைத்து, தண்ணீரை சேகரிக்கும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.