/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடன் செட்டி சங்கமம் நிகழ்ச்சி; குடும்பங்களை சந்தித்து மகிழ்ச்சி பரிமாற்றம்
/
வயநாடன் செட்டி சங்கமம் நிகழ்ச்சி; குடும்பங்களை சந்தித்து மகிழ்ச்சி பரிமாற்றம்
வயநாடன் செட்டி சங்கமம் நிகழ்ச்சி; குடும்பங்களை சந்தித்து மகிழ்ச்சி பரிமாற்றம்
வயநாடன் செட்டி சங்கமம் நிகழ்ச்சி; குடும்பங்களை சந்தித்து மகிழ்ச்சி பரிமாற்றம்
ADDED : நவ 15, 2024 09:22 PM

பந்தலுார் ; கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில், வயநாடன் செட்டி சமுதாய மக்கள் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கன்வீனர் கங்காதரன் வரவேற்றார். ஸ்ரீலயா தலைமையில் பிரார்த்தனை நடந்தது.
தொடர்ந்து, தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்து பேசியதாவது:
வயநாடன் செட்டி சமுதாய மக்கள் தமிழகத்தின் தாராபுரத்தை, பாரம்பரியமாக கொண்டவர்கள். தற்போது, கேரளா வயநாடு மற்றும் தமிழகத்தின், நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தாராபுரம் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி, 30ம் தேதி, சமுதாய மக்கள் அனைவரும் தாங்கள் விவசாயம் செய்த, விளை பொருட்களையும் கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவர். ஏழு நாட்கள் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன் ஒரு பகுதியாக, இன்றைய நாளில் அனைவரும் ஒன்றாக குடும்பத்துடன் சந்தித்து, உறவுகளை மேம்படுத்தி, திருமண வயதில் உள்ள தங்கள் குழந்தைகளுக்கு பெண் மற்றும் மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அத்துடன் வயநாடு பகுதியை ஆட்சி செய்த கோட்டயம் மன்னர், அப்போதைய செட்டி சமுதாய தலைவருக்கு அணிவித்த விலை உயர்ந்த, தங்க காப்பை, வங்கி லாக்கரிலிருந்து எடுத்து வந்து, அனைவருக்கும் காட்டும் நிகழ்வும் நடக்கும். விவசாய மேம்படவும் இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனையும் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
சுல்தான் பத்தேரி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட கூடலுார் எம்.எல்.ஏ. ஜெயசீலன், சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் வேணுகோபால் ஆகியோர், நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, 101- பெண்கள் பங்கேற்ற, திருவாதிரை நடனம் அனைவரையும் கவர்ந்தது. செண்டை மேள வாத்தியத்துடன் நடந்த பேரணி பத்தேரி பஜார் பகுதியில் வந்து, விநாயகர் கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழு செயலாளர் சதீஷ், சங்க செயலாளர் சண்முகம், தமிழ்நாடு பிரிவு நிர்வாகி தர்மராஜ், கேரளா பிரிவு செயலாளர் பாலகிருஷ்ணன், நிர்வாகி வாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

