/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எங்களுக்கும் அடிப்படை வசதி வேண்டும் : கலெக்டரிடம் மனு அளித்த பழங்குடிகள்

UPDATED : டிச 23, 2025 08:02 AM
ADDED : டிச 23, 2025 07:06 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களுக்கு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரை பழங்குடியின மக்கள் சந்தித்து மனு அளித்தனர்.
பந்தலுார் அருகே பன்னிக்கல் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில், காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த, 24 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், சாலை வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதே போல், பாதிரிமூலா பகுதியில், 42 குடும்பங்களில், பணியர் சமுதாய பழங்குடி மக்கள் குடியிருந்து வரும் நிலையில், இவர்களுக்கு அரசு மூலம் கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகள், கட்டிய சில மாதங்களிலேயே இடிந்து வருகின்றன. அதனை சீரமைத்து தரவும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், பன்னிக்கல் கிராமத்தை சேர்ந்த, பழங்குடியின பெண் காக்கா மற்றும் சிவன் ஆகியோர், சிந்து என்பவர் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, தொகுப்பு வீடு, அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து உடனடியாக தீர்வு காண, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.