‘கிணறு இருக்கு தண்ணீரை காணோம்’ பழங்குடியின மக்கள் தவிப்பு
‘கிணறு இருக்கு தண்ணீரை காணோம்’ பழங்குடியின மக்கள் தவிப்பு
ADDED : செப் 06, 2026 05:00 PM
பந்தலூர்: பந்தலூர் அருகே, கோட்டைப் பாடி பழங்குடியின கிராமத்தில், கிணறு இருந்தும் தண்ணீர் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தலூர் அருகே அமைந்துள்ளது கோட்டைப்பாடி பழங்குடியினர் கிராமம். இந்த கிராமத்து மக்கள் பயன்பெறும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வாயிலாக கிராமத்திற்கு மத்தியில் கிணறு அமைக்கப்பட்டது. கிராமத்திற்கு மத்தியில் திறந்த நிலையில் ஆழமாக உள்ள கிணற்றில் யாரேனும் தவறி விழுந்தாலும், கடுமையான பாதிப்புகள் ஏற்படும் நிலை காணப்படுகிறது.
பல லட்ச ரூபாய் செலவு செய்து அரசு நிதியில், கிணறு அமைக்கும் போது அந்த இடத்தில் தண்ணீர் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு செய்யாமல், ஒப்பந்ததாரர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கிணறு அமைக்கப்பட்டது.
எனவே, இதுபோன்ற கிணறுகள் அமைக்கும் முன்பு, அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றெடுக்குமா என்பதை ஆய்வு செய்து கிணறு அமைக்க வேண்டும் என்றும், இது போன்று அரசு நிதிகளை வீணாக செலவு செய்ய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அபாய நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
