நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி அருகே தும்மனட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று பேசுகையில், ''மாநில அரசு, கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி திட்டம் என, பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திட்டங்களை அறிந்து பொதுமக்கள் பயனடைய வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, 22 பயனாளிகளுக்கு, 50 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ., மகராஜ், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.

