/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூஜ்ய கழிவு, பிளாஸ்டிக் மாசுபாடு முடிவு திட்டம் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திற்கு விருது வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திற்கு விருது

ADDED : அக் 02, 2025 08:55 PM

குன்னுார்:பூஜ்ய கழிவு மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு முடிவுக்கு கொண்டு வரும் செயல்திட்டங்களுக்கு வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் தேசியளவில் முதலிடம் பெற்று, விருது பெற்றுள்ளது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து, பிளாஸ்டிக் தவிர்ப்பு, மஞ்சள் பை வழங்குதல், துாய்மை திட்டம் என செயல்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சமூக பொருளாதார பிரச்னைகளை கையாளும், நாட்டின் முன்னணி முழு சேவை ஆலோசனை நிறுவனமான 'ஸ்கோச்' குழுமம் சார்பில், சமீபத்தில் தேசியளவில் நடத்திய போட்டிகளில், வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உட்பட, 150 நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், பூஜ்ய கழிவு நிகழ்வு மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 3 அமர்வு தேர்வுகளில் முதலிடம் பிடித்தது. இதற்கான விருது டில்லியில் கடந்த, 20ல் நடந்த ஸ்கோச் உச்சி மாநாட்டில் வழங்கப்பட்டது.
நேற்று வாரியத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், விருது பெற காரணமாக இருந்த துாய்மை பணியாளர்கள், சுகாதார அதிகாரிகளை, பாராட்டி கவுரவித்த வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபா சாகிப் லோட்டே பேசுகையில், ''கடந்த, 6 மாதங்களில் வாரியத்தில், திருவிழாக்கள், பண்டிகைகள் உட்பட குப்பை கழிவுகளை முழுமையாக அகற்றும் வழிமுறைகள். பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இதற்காக விருது வழங்கப்பட்டதுடன் இதன் முன்மாதிரிகள் மற்ற இடங்களில் செயல்படுத்த இந்த குழுமம் அரசுக்கு பரிந்துரைக்கும்,'' என்றார்.