/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
/
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
ADDED : அக் 02, 2025 08:53 PM

குன்னுார்:குன்னுார் வெலிங்டன் எம்.ஆர்.சி.,யில் போர்களில் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர் உட்பட ராணுவ தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை செய்யப்பட்டது.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்.ஆர்.சி.,) சார்பில், நேற்று பேரக்ஸ் முருகன் கோவிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
எம்.ஆர்.சி., துணை கமாண்டன்ட் குட்டப்பா தலைமை வகித்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார்.
அதில், போரில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கிகள் உட்பட தளவாட பொருட்கள், பேண்ட் இசை கருவிகள், ராணுவ வாகனங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பேண்ட் இசை குழு ராணுவ வீரர்களின் பக்தி பாடல்கள் இடம் பெற்றது. பிரசாத வினியோகம் நடந்தது. ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் உட்பட திரளாக பொதுமக்களும் பங்கேற்றனர்.