தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரூ.63.32 லட்சம் மதிப்பில் நல திட்ட உதவிகள்

ரூ.63.32 லட்சம் மதிப்பில் நல திட்ட உதவிகள்

ரூ.63.32 லட்சம் மதிப்பில் நல திட்ட உதவிகள்


ADDED : ஆக 12, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், ரூ.63.32 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குன்னுார் உபதலை சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் அரசு துறைகளின் கண்காட்சி இடம் பெற்றது.

நிகழ்ச்சியில், சுய உதவிக்குழு கடனுதவி, விவசாயிகளுக்கு பயிர் கடன், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு, மக்களை தேடி மருத்துவம் திட்ட பலன்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில்,‘‘மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள், நேரில் கள ஆய்வு மேற்கொண்ட பின், 47 பயனாளிகளுக்கு, 63.32 லட்சம் மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மட்டுமின்றி, முகாமில் நேரடியாக பெறப்பட்ட புதிய கோரிக்கை மனுக்களும் துறை சார்ந்த அலுவலர்களால் ஆய்வுக்கு உட்படுத்தி, கள ஆய்வுக்கு பின் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும், என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us