/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பார்க்கிங்' தளம் திறக்காததற்கு காரணம் என்ன? கேள்வி எழுப்பிய பொது மக்கள்
/
'பார்க்கிங்' தளம் திறக்காததற்கு காரணம் என்ன? கேள்வி எழுப்பிய பொது மக்கள்
'பார்க்கிங்' தளம் திறக்காததற்கு காரணம் என்ன? கேள்வி எழுப்பிய பொது மக்கள்
'பார்க்கிங்' தளம் திறக்காததற்கு காரணம் என்ன? கேள்வி எழுப்பிய பொது மக்கள்
ADDED : டிச 24, 2024 10:44 PM

கோத்தகிரி, ; 'கோத்தகிரி பஸ் நிலையத்தில் 'பார்க்கிங்' தளம் திறக்காததற்கு, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த, 'பார்க்கிங்' தளம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மழையின் போது, தளத்தின் ஒரு பகுதியில் சிறிய குழி ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு கருதி, வாகனங்கள் நிறுத்த போலீசார் அனுமதி மறுத்து, 'பேரிகார்டு' அமைத்தனர். பேரூராட்சி நிர்வாகம், குறிப்பிட்ட குழியை அடைத்து சீரமைத்தது. பல மாதங்கள் கடந்தும், வாகனங்கள் நிறுத்த தடை நீடித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, பஸ் நிலையம் சாலையின் ஒரு பகுதியில், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் வாகனங்கள், நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்காக, சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தினாலும், போக்குவரத்து போலீசார், அபராதம் விதிக்கின்றனர்.
இதனால், மருத்துவம் உட்பட, அவசர தேவைக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மககள் கூறுகையில், 'பேரிகார்டு அமைத்த பகுதியில் வாகனங்கள் நிறுத்த முடியாததற்கு, காரணம் என்ன என்பதை, போலீசார் விளக்க வேண்டும். பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.