கோடநாடு காட்சி முனையில் மூலிகை தோட்டம் எப்போது வரும்?
கோடநாடு காட்சி முனையில் மூலிகை தோட்டம் எப்போது வரும்?
UPDATED : நவ 13, 2026 07:19 PM
ADDED : நவ 13, 2026 07:15 PM

கோத்தகிரி:
கோத்தகிரி காட்சி முனை பகுதியில், மூலிகை தோட்டம் அமைய இருந்த இடம் வீணாக உள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கோத்தகியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் கோடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. இங்குள்ள கோபுரத்தின் கீழ்ப்பகுதியில் வளர்ந்துள்ள வானுயர்ந்த சீகை மரங்களால், தாழ்வான பகுதியில் உள்ள, இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டுக்களிக்க முடியாத நிலை இருந்தது.
சீகை மரங்களை அகற்றி, சோலை மரங்கள் நடவு செய்ய ஏதுவாக, மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அப்பகுதியில், மாவட்டத்திற்கு உரித்தான மூலிகை தோட்டம் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
குறிப்பிட்ட இடத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால், மூலிகை தோட்டம் அமைப்பதற்கான பணி இதுவரை நடக்கவில்லை. இதனால், அந்த இடம் புதர் சூழ்ந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் மூலிகை தோட்டம் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
