தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதிய மினி பஸ் இயக்கம் எப்போது? பழங்குடியின மக்கள் காத்திருப்பு

புதிய மினி பஸ் இயக்கம் எப்போது? பழங்குடியின மக்கள் காத்திருப்பு

புதிய மினி பஸ் இயக்கம் எப்போது? பழங்குடியின மக்கள் காத்திருப்பு


ADDED : ஆக 26, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின கிராமங்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மக்கள் ஜீப்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்று வருகின்றனர். கலெக்டர் லட்சுமி பவ்யா எடுத்த நடவடிக்கையால் தொலை தூர பழங்குடியின கிராமங்களுக்கு மினி பஸ் இயக்கம் துவங்கியது. குன்னூரில் பெள்ளட்டி மட்டம் பகுதிக்கு புதிய மினி பஸ் துவங்கியதால் சுற்றுப்புற பழங்குடியின மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

கோத்தகிரி ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட பெட்டுமந்து தோடர் பழங்குடியின கிராமம் மற்றும் ஆருவ ஒசஹட்டி உட்பட சுற்றுப்புற கிராமங்கள் பயனடையும் வகையில் மினி பஸ் இயக்க மக்கள் கலெக்டருக்கு மனு வழங்கினர்.

எனினும், குன்னூரை சேர்ந்த இரு மினி பஸ் உரிமையாளர்களே இந்த வழித்தடத்திற்கு அடிப்படை ஆதாரமற்ற ஆட்சேபனைகளை தெரிவித்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இந்த கிராம வழித்தடத்தில் மினி பஸ் இயக்க வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழித்தடத்தில் புதிய மினி பஸ் இயக்கத்திற்காக கிராம மக்கள் காத்துள்ளனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us