/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்வையாளர்களை கவரும் வெள்ளை நிற சூரியகாந்தி பூக்கள்
/
பார்வையாளர்களை கவரும் வெள்ளை நிற சூரியகாந்தி பூக்கள்
பார்வையாளர்களை கவரும் வெள்ளை நிற சூரியகாந்தி பூக்கள்
பார்வையாளர்களை கவரும் வெள்ளை நிற சூரியகாந்தி பூக்கள்
ADDED : டிச 25, 2024 08:07 PM

பந்தலுார்; பந்தலுார், நெலாக்கோட்டை பகுதியில் பூத்து குலுங்கும், வெள்ளை நிற காட்டு சூரியகாந்தி மலர்கள், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
கூடலுார், பந்தலுார், முதுமலை, நடுவட்டம் வனப்பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணி தாவரங்கள்; குறிஞ்சி உள்பட ஏராளமான அரிய மலர் செடிகள் உள்ளன. அதில் இரண்டு வகையான காட்டு சூரியகாந்தி மலர்கள் தற்போது பூத்து காணப்படுகிறது. அதில், சாலையோரங்களிலும், நீரோடைகளை ஒட்டியும் மஞ்சள் நிறத்தில் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்து அழகாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், தற்போது பந்தலுார் அருகே நெலாக்கோட்டை, ஏலியாஸ்கடை, சாமியார் மலை சாலையோர வனங்களில் வெள்ளை நிறத்தில் காட்டுசூரியகாந்தி மலர்கள் பூத்துள்ளது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் டிச., முதல் தேதியில் பூக்க துவங்கும் இந்த பூக்கள், சுற்றுலாப்பயணிகளை மட்டுமின்றி, உள்ளூர் மக்களையும் கவர்ந்து வருகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் உஸ்மான் கூறுகையில், ''பந்தலுார் பகுதியில் இயற்கையாக வளரக்கூடிய பல அரியவகை தாவரங்கள், மூங்கில்கள், பெரணி செடிகள், மூலிகைகள் உள்ளன. அதில், வெள்ளை நிற காட்டுசூரியகாந்தி மலர்கள் நறுமணம் வீசுவதுடன் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி தருகிறது. இதுபோன்ற தாவரங்களை பாதுகாக்க கோடை காலங்களில் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்,'' என்றார்.