/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை நடமாட்டம்
/
தேயிலை தோட்டங்களில் காட்டெருமை நடமாட்டம்
ADDED : ஜூலை 08, 2025 08:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனப்பகுதியில் இருந்து, கூட்டமாக வெளியே வரும் காட்டெருமைகள் தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. உணவு தட்டுப்பாடு காரணமாக, வீட்டு தோட்ட பயிர்களை மேய்வதற்கு, குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், பசுந்தேயிலை பறிப்பது உட்பட, தோட்டப்பணிகளை அச்சத்திற்கு இடையே மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
எனவே, வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம்.

