/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் கிணற்றில் விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
/
கோத்தகிரியில் கிணற்றில் விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
கோத்தகிரியில் கிணற்றில் விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
கோத்தகிரியில் கிணற்றில் விழுந்த காட்டெருமை பத்திரமாக மீட்பு
ADDED : மே 18, 2025 09:59 PM
கோத்தகிரி; கோத்திரியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கிறது.
இந்நிலையில், அரவேனு அருகே, தனியார் தொழிற்சாலை அருகே, நேற்று காலை காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அவ்வழியாக சென்ற பகுதி மக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, 20 அடி கிணற்றில் விழுந்து, தத்தளித்த காட்டெருமையை, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பத்திரமாக மீட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தனியார் தொழிற்சாலை அருகே, ஆறு வயதுடைய ஆண் காட்டெருமை, கிணற்றில் தவறி விழுந்து, மினி பொக்லைன் உதவி யுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, தனியார் இடங்களில் கிணற்றுகளை மூடி வைக்க வேண்டும்,' என்றனர்.