/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பரிதாப பலி
/
குன்னுாரில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பரிதாப பலி
குன்னுாரில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பரிதாப பலி
குன்னுாரில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பரிதாப பலி
ADDED : செப் 12, 2025 08:09 PM

குன்னுார்; குன்னுாரில் டிரான்ஸ்பார்மர் 'ஸ்டே' ஒயரில் சிக்கி தப்ப முயன்ற காட்டெருமை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் 'ஸ்டே' கம்பியில் சிக்கியவாறு காட்டெருமை ஒன்று, இறந்து கிடந்தது குறித்து, மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கால்நடை டாக்டர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர், காட்டெருமை உடலை பிரேத பரிசோதனை செய்து, அதே இடத்தில் புதைத்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஸ்டே கம்பியில் சிக்கிய, 15 வயதுடைய பெண் காட்டெருமை தப்ப வேண்டி ஓட்டம் பிடித்துள்ளது. அப்போது, ஸ்டேகம்பி, உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது,' என்றனர்.