/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனத்தை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு
/
வாகனத்தை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு
ADDED : ஜூலை 31, 2025 09:27 PM

கூடலுார்; கூடலுார், தேவர்சோலை அருகே, வாழைதார் கடையை சேதப்படுத்திய காட்டு யானை, வாகனத்தையும் துரத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கூடலுார் தேவர்சோலை அருகே உள்ள பாடந்துறை, கம்பாடி, சர்கார்மூலா, 3-வது டிவிசன், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், காட்டு யானைகள் இரவில் நடந்த விவசாய பயிர்கள், வீடுகள், வாகனங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம், தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் அருகே, முகாமிட்ட காட்டு யானை, பிஜெஷ் என்பவர் வீட்டின் அருகே இருந்த இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி படுத்தி சென்றது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வாழை தார் கடையின் இரும்பு சட்டரை சேதப்படுத்தியது. அப்பகுதியினர் சப்தமிட்டு விரட்டினர். யானை, திடீரென, அவ்வழியாக வந்த காரை ஆக்ரோசமாக துரத்தியது. ஓட்டுனர், வேகமாக காரை இயக்கி உயிர் தப்பினார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். யானையை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
மக்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதிகள் இரவில் உலா வரும் காட்டு யானைகள், விவசாய பயிர், கடைகளை சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதி மக்கள் அவசர தேவைக்கு கூட இரவில் வெளியில் நடமாட முடியாத நிலையில் உள்ளனர். வனவிலங்குகளால் மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், வனத்துறையின இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்,' என்றனர்.

