/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயலில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிரை சேதப்படுத்திய காட்டு யானைகள்
/
வயலில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிரை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வயலில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிரை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வயலில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிரை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ADDED : நவ 18, 2025 01:38 AM
கூடலுார்: கூடலுார், குணில் பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிரை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
கூடலுார், தொரப்பள்ளி குணில், புத்துார்வயல், அல்லுார்வயல் விவசாய தோட்டங்களுக்குள், காட்டு யானைகள் நுழைவதை தடுக்க, வனத்துறை சார்பில், முதுமலை வன எல்லையை ஒட்டி அகழி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சில ஆண்டுகள் காட்டு யானைகள் நுழைவது தடுக்கப்பட்டது. சில யானைகள் அகழியை சேதப்படுத்தி, வயல்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்த துவங்கின. சேதமடைந்த அகழியை வனத்துறையினர் சீரமைத்தனர். எனினும், காட்டு யானைகள் மீண்டும் அகழியை சேதப்படுத்தி விவசாய தோட்டங்களுக்கு வந்து செல்கிறது. இதனை தடுக்க, வனத்துறையினர் இரவு முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு பாபு என்பவரின் வயல்களில் நுழைந்த காட்டு யானை, அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிர்களை மிதித்து சேதப்படுத்தியது. இது போன்ற பல வயல்களில் யானைகள் நுழைந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. பல ஏக்கர் பரப்பில் நெற்கதிர் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'அடுத்த மாதம் நெற்கதிர் அறுவடை துவங்க உள்ள நிலையில், காட்டு யானைகள் வயல்களில் நுழைந்து அவற்றை சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். காட்டு யானைகள் வயல்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், சேதமடைந்த நெற்பயிருக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய, அரசு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.

