/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆசிரியர் தகுதி தேர்வில் 336 பேர் 'ஆப்சென்ட்'
/
ஆசிரியர் தகுதி தேர்வில் 336 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 18, 2025 01:38 AM
ஊட்டி: நீலகிரியில் ஒன்பது தேர்வு மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை, 2,341 பேர் எழுதினர். 336 பேர் எழுதவில்லை.
நடப்பாண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஆக., மாதம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.
இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தேர்வு தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்--2 தேர்வுகள் நடந்தது.
தேர்வுக்காக, 'ஊட்டி ஜோசப் பள்ளி, பெத்லகேம் பள்ளி, சாந்தி விஜய் பள்ளி, நிர்மலா மெட்ரிக் பள்ளி, யூனிக் பப்ளிக் பள்ளி, சி.எஸ்.ஐ., பள்ளி, சி.எம்.எம்., பள்ளி, சி.எஸ்.ஐ., ஜெல் பெண்கள் பள்ளி, குன்னூர் ஆன்டனி உயர்நிலை பள்ளி,' என, 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழ், 'மலையாளம், தெலுங்கு, கன்னடம், கணிதம், அறிவியல் சமூக அறிவியல்,' பாடங்கள், என, மொத்தம், 2,677 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதில், 2,341 பேர் தேர்வு எழுதினர். 336 பேர் தேர்வு எழுதவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு, காப்பி அடித்தல் உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்கும் விதமாக சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது.

