/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு வார விழா; சாலையோர குப்பை அகற்றம்
/
வனவிலங்கு வார விழா; சாலையோர குப்பை அகற்றம்
ADDED : அக் 05, 2025 10:57 PM
கூடலுார்: வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, முதுமலை, மசினகுடி -ஊட்டி சாலையில், வன ஊழியர்கள் குப்பை 'பிளாஸ்டிக்' கழிவுகளை அகற்றினர்.
ஆண்டுதோறும், அக்., 2 முதல் 8ம் தேதி வரை, வனவிலங்கு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதுமலை மசினகுடி கோட்டத்தில் வனவிலங்கு வார விழா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதில், ஒரு பகுதியாக, சிங்கார வனச்சரகம் சார்பில், மசினகுடி- ஊட்டி சாலையில் மாவனல்லா முதல், முதுமலை மசின குடி நுழைவு வாயில் வரை, சிங்கார வனச்சரகர் தனபால் தலைமையில் வன ஊழியர்கள், சாலையேரங்களில், பயணிகள் வீசி சென்ற குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மசினகுடி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், 'வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு, மசினகுடி ஊட்டி சாலையில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வீசி சென்ற குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன், இவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,' என்றனர்.